ஹமாசின் தேவை நாடு அல்ல, யூதர்களை கொல்லுவது மட்டும்தான் – பில்கிளின்ரன்

நான் ஜனாதிபதியாக இருக்கின்ற போது, பாலஸ்தீனியர்களுக்கு, காசா உள்ளடங்கலாக 97 விகிதமான நிலத்தை வழங்க முன்வந்தேன் ஆனால் அவர்களுடைய தேவை ஒரு தாய் நாடாக இருக்கவில்லை மாறாக, யூத மக்களை கொல்லுவது மட்டும்தான் அவர்களுடைய தேவையாக இருந்தது. இவ்வாறு, முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதி பில்கிளின்ரன் தெரிவித்திருக்கின்றார். பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் பேசுகின்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். சில மாதங்களுக்கு முன்னர் கிளின்ரன் கூறிய மேற்படி கருத்து, தற்போது சமூக ஊடங்களில் வைரலாகிவருகின்றது.