ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வு பணியகத்தின், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, தேசிய புலனாய்வு சேவையின் முன்னைநாள் பணிப்பாளர் சுரேஸ் சலே, உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது விடுதலையில் மனிதாபிமான தலையீட்டை மேற்கொள்ளுமாறு, பரிசுத்த பாப்பாரர் ஒன்பதாம் போப் லியோவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. வத்திக்கானின் இலங்கைக்கான இராஜந்திர பிரதிநிதிக்கு முகவரியிட்டு, மேற்படி கடிதம் சலேயின் உறவினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
