முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. அண்மையில், விமல் வீரவங்ச, போர் வீரர்கள் நினைவஞ்சலி நிகழ்வில் இடையூறு விளைவித்தார் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க, தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்திருந்ததுடன், தனியாக சந்திக்கும் விருப்பத்தையும் தெரிவித்திருந்ததாக, கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் வீட்டில் சந்தித்து, இருவரும் நீண்ட நேரம் உரையாடிருக்கின்றனர்.
இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கின்றது. இதில் வீரவங்சவால் முக்கிய பங்களிப்பொன்றை வழங்க முடியும் என்றும் ரணில் வலியுறுத்தியிருக்கின்றார். மிக விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய எதிர்க் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து கூட்டு எதிர்க்கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு ரணில் தலைமை தாங்கவுள்ளார்.
