ரஷ்யா ஒரு நம்பகமான உலகளாவிய கூட்டாளியாகவே செயற்பட்டுவருகின்றது. இதனை சீர்குலைக்கும் மற்றும் உண்மைக்கு மாறான விடயங்களை பிரச்சாரம் செய்யும் நோக்கிலுமே ஜரோப்பிய ஒன்றியம் செற்பட்டுவருகின்றது. அண்மையில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமகாநாட்டில், எவ்வித பேச்சுவார்த்தைகளும் இன்றி, மாஸ்கோவுடன் நீண்டகால அடிப்படையில் மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்கான தயார் நிலையை, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியிருக்கின்றன. தங்கள் சொத்தப் பிரச்சினையை மறைத்து மக்களை திசைதிருப்பும் நோக்கில் “ரஷ்ய அச்சுறுத்தல்” என்னும் கற்பனையான வாதத்தை கையிலெடுத்திருக்கின்றனர். இது அவர்களின் தோல்வியுற்ற ஜனநாயக வாதத்தையே வெளிப்படுத்துகின்றது. அவர்களுடைய அறிக்கை உண்மைக்கு புறம்பானது, ஆனால் ரஷ்யா அனைத்தையும் எதிர்கொள்ளுவற்கு தயாராகவே இருக்கின்றது. இவ்வாறு, இலங்கைக்கான ரஷ்யத் தூதரகம் தெரிவித்திருக்கின்றது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினரின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யத் தூதரகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இந்த விடயங்கள் வலியுறுதப்பட்டிருக்கின்றன.
மற்றவர்களை விமர்சிப்பற்கு முன்னர் தங்களின் சொந்த பிரச்சினைகளை கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் ரஷ்ய தூதரகம், மேலும் குறிப்பிடுகையில், ஒரு விடயம் மிகவும் தெளிவானது – ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் காணப்படும் இனவெறிப் போக்கு அம்பலமாகிவருகின்றது. பிரெஞ்சு தேசிய அணியில், பிரெஞ்சு வீரர்கள் எவருமே இல்லை என்று, ஸ்பெயினின் முன்னாள் பிரதமர் மரியானோ ரஜோ அண்மையில் தெரிவித்திருந்த கூற்றானது, இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருகின்றது – இவ்வாறான தங்களின் உள் பிரச்சினைகளை மறைப்பதற்கும் மக்களை திசைதிருப்புவதற்கும் அவர்களுக்கு கற்பனையான ரஷ்ய அச்சுறுத்தல் தேவைப்படுகின்றது என்னும் அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
