இளைய தலைமுறையினரை சந்தித்து கலந்துரையாடிய போதே ரணில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்று கருதப்படும் ரணில் அவ்வப்போது நான் இன்னும் இங்குதான் இருக்கின்றேன், என்பதை காண்பிக்கும் நோக்கில் சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார்.
இந்த அடிப்படையில்தான், கொழும்பு சினமன் கிராண்ட ஹொட்டலில் இளைய தலைமுறையினரை சந்தித்திருக்கின்றார். களத்தில் இறங்கி பணியாற்றுபவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கப் போவதாக குறிப்பிட்டிருக்கும் ரணில், அரசியலில் அர்ப்பணிப்பே அவசியம் – அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் எதனைக் கற்றும் பயனில்லை. ஏனெனில் அரசியல் என்பது ஒரு கடினமான பயணம் சிலர் வீழ்ந்து விடுகின்றனர், சிலர் விலகிவிடுகின்றனர்.
இதன் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, சாணக்கியர்களை படிப்பது அவசியம் என்று குறிப்பிட்டிருக்கும் ரணில் – எனினும் நான் ரணிலாகவே இருக்கின்றேன் என்றும் பதிலளித்திருக்கின்றார்.
