பொருளாதார நெருக்கடியை கையாளுவதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும். அரசியலை பொருளாதார விடயங்களிலிருந்து வேறுபடுத்தி நோக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை உடனடியாக காணாதுவிட்டால் அதன் பின்னர் அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிக காலம் செல்லும்.
நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் திருத்தங்களை கொண்டுவருவதால் இந்தப் பிரச்சினையை கையாள முடியாது. அவை பயனற்றவை. பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படாவிட்டால் மக்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள். கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே ரணில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.
