அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமான நீண்டகால பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துதல் என்னும் அடிப்படையில், அமெரிக்காவினால் வழங்கப்பட்ட பத்து பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிக்கொப்டர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளது. கடல்வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த ஹெலிக்கொப்டர்கள், தொழில்நுட்பம் சார்ந்த பரிசோதனைகளுக்காக, தற்போது இரத்மலானையிலுள்ள இலங்கை கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
பரிசோதனைகளைத் தொடர்ந்து இலங்கையின் கடற்படைப் பாவனையில் குறித்த ஹெலிக்கொப்டர்கள் இனைத்துக் கொள்ளப்படும். கடற்படையின் பயிற்சி, மனிதநேயப்பணிகள், அனர்த்த மீட்புப்பணிகள் ஆகிய நடவடிக்கைகளை கருத்தில் கொண்டே, குறித்த ஹெலிக்கொப்டர்களை வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருக்கின்றது.
