மத்திய கிழக்கு மோதல் அண்மைக்காலத்தில் தீர்க்கப்படக் கூடிய ஒன்று என்னும் நிலைiமையை கடந்துவிட்டதாகவே நோக்கப்படுகின்றது. இந்த நிலைமை இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தப் பின்புலத்தில், அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் 7 வீதமாக உயரக்கூடும் என்று சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தம் உருவாகி வருகிறது. தற்போது சுமார் 5.4மூ முதல் 5.5மூ வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள பணவீக்கம், தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எரிபொருள் விலைகளில் தொடர்ச்சியான உயர்வை நாங்கள் கவனித்துள்ளோம், அதே நேரத்தில் நுகர்வோர் தேவையில் குறிப்பிடத்தக்க சரிவு எதுவும் காணப்படவில்லை.
இந்த நிலைமைகள் தொடர்ந்தால், பணவீக்கம் 5மூ ஐத் தாண்டி 7மூ ஐ எட்டக்கூடிய அபாயம் உள்ளது.
பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய வங்கி தனது பணவியல் கொள்கையை இறுக்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
