மன்னாரில் கடல் அட்டை மாபியாக்கள் கைது

மன்னாரிலிரிருந்து சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு செல்ல முற்பட்டவர்களை, கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். சந்தேகத்தின் பெயரில் 26 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சுமார் 60000 கடலட்டைகளை கொண்டு செல்ல முற்பட்ட போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. வடக்கு மத்திய கடற்படைத் தளத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கட்லட்டை பண்ணைகள் வடக்கிற்குள் ஊடுருவிய பின்னர், இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. கடலட்டை பண்ணைகளில் சீனாவே முதலீடுகள் செய்திருப்பதாகவும் இதன் மூலம் வடக்கின் பாரம்பரிய மீன் பிடித் துறையே காலப் போக்கில் இல்லாமல் போய்விடும் ஆபத்திருப்பதாகவும் பலரும் எச்சரித்திருந்தனர். எனினும் முன்னைய அரசாங்கத்தின் ஆதரவுடன் கட்லட்டைப் பண்ணைகள் பல்கிப் பெருகின. கிழக்காசிய நாடுகளில் கடலட்டை உணவுகளுக்கு பிரமாண்டமான சந்தை வாய்ப்புக்கள் உண்டு. குறிப்பாக சீனர்களே இதனை அதிகளவில் உண்ணுகின்றனர். இந்த பின்புலத்தில்தான், கறுப்பு சந்தை லாபத்தை நோக்காகக் கொண்டு, இவ்வாறான கடத்தல் முயற்சிகள் இடம்பெறுகின்றன.