ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜத்பா கமேனி உயிருடன் இல்லையா?

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு டெஹிரானில் இடம்பெற்றிருந்தது. இந்த இறுதில் சடங்கில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் சபாநாயகர் ரிஸ்வி மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.

இந்த இறுதிச் சடங்கில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. தந்தையின் இறுதிச் சடங்கில், அலி கமேனியின் மகனும் புதிய உச்சத் தலைவருமான மொஜ்தபா கமேனி கலந்து கொள்ளவில்லை. இது பலமான சநதேகங்களை எழுப்பியுள்ளது. இஸ்ரேலிய வான் வழித் தாக்குதலினால், அவர், பலத்த காயங்களுக்கு உள்ளானதாக முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது – எனினும், டெஹிரான் அதனை மறுத்ததுடன் அவர் நலமாக இருக்கின்றார் என்றே கூறிவந்தது. அவ்வாறாயின் அவர் ஏன் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்னும் கேள்வி எழுந்திருக்கின்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக தலைமறைவாக இருக்கின்றார் என்னும் வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒன்றில் அவர் உயிருடன் இல்லை அல்லது இருந்தாலும் ஆரோக்கியமாக இல்லை என்னும் முடிவுக்கே வரவேண்டியிருப்பதாகவே கருதப்படுகின்றது.