ஈரானுடனான போர் நிறுத்த உடன்பாடு முடிந்துவிட்டது ஆனால் ஈரான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களுடன் பேசுவதற்கு தடையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கின்றார். சவுதி மற்றும் கட்டாருக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து அமெரிக்கா கடுமையான பதில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே தற்போது டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கின்றது. இதனால் மீண்டும் உலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரிக்கவுள்ளன.
