இஸ்லாமிய உலகில் மேலாதிக்கத்தை அடைய வேண்டும் என்னும் நோக்கிலேயே ஈரான் செயற்பட்டுவருகின்றது. தங்களின் அதிகாரப் பசிக்காக பாலஸ்தீனர்களை, ஒரு கருவியாகப் பயன்படுத்திவிட்டு, தற்போது அவர்களை கைவிட்டுவிட்டனர். எர்டோகன், சதாம் உசேன், ஆசாத், நாசர், கடாபி, பின்லேடன் போன்றவர்கள் எவ்வாறு செயற்பட்டனரோ, அப்படித்தான் ஈரானும் செயற்பட்டது.
ஈரானிய ஆட்சியாளர்களுக்கு பாலஸ்தீனர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், 2000, 2001, 2007 மற்றும் ஏனைய காலகட்டங்களில் முன்வைக்கப்பட்ட, பாலஸ்தீன அரசை அமைப்பது உள்ளிட்ட பலவாறான அமைதி ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களை ஊக்குவித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. இவ்வாறு, இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவரும் இலங்கைக்கான வதவிடமற்ற தூதுவருமான ரூவான் அசார், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
பாலஸ்தீனியர்களுக்கான சமாதானத்தை ஏற்படுத்தும் வழிக்கு பதிலாக, பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் கடும்போக்குவாதத்தை ஊக்குவிப்பதோடு, சமூக விரோதக் குழுக்களுக்குப் பேரழிவு ஆயுதங்களையும் பரப்புகிறார்கள்;. ஈரானின் இந்த நடவடிக்கையானது, ஒட்டுமொத்த மனிதகுலத்தின், குறிப்பாக முஸ்லிம்களின் துயரத்தை நீடிக்கச் செய்வதற்கே பயன்படுகின்றது. என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
