ஜக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வெளியில் வைக்கப்பட்டிருக்கின்றனர் – ஆனால் பிசாசுகளின் குழந்தைகள் கட்சியின் செயற் குழுவிற்குள் நுழைந்திருக்கின்றனர் – இவ்வாறு, ஜக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னைநாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
ஜக்கிய தேசியக் கட்சியும் ஜக்கிய மக்கள் சக்தியும் ஒன்ணிணைந்து செயற்பட வேண்டும் – அப்போதுதான் கடசியின் தலைவர்களும் கட்சியின் உறுப்பினர்கள் அரசியலில் இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். கட்சிகளுக்குள் புதியவர்கள் உள்வாங்கப்படும் போது, பழையவர்களுக்கு ஏற்படும் கொதிப்புத்தான் இது என்றே அவதானிகள் கூறுகின்றனர்.
