இன ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில், கொழும்பு உயர் நீதிமன்றம் , ஹலகொட அத்த ஞானராச தேரருக்கு ஒன்பது ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, குறித்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி, மஞ்சுளா திலகரட்ண, மேன் முறையீட்டை இரத்துச் செய்து, தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்ச்சைக்குரிய பிக்குவான ஞானராச தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பு, கோட்டபாய ராஜபக்ச காலத்தில் செல்வாக்குமிக்க அமைப்பாக இருந்தது
