சம்பந்தனுக்கான நினைவேந்தல் கூட்டத்தில் மிகவும் குறைவானவர்கள்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்த, காலம் சென்ற இராஜவரோதயம் சம்பந்தனின், இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் கூட்டம், நேற்றைய தினம், (11.07.2026) திருகோணமலை, மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், எதிர்பார்த்தவாறு திருகோணமலை மக்கள் பங்குகொள்ளவில்லை. ஆகக் குறைந்தது, கட்சியின் உறுப்பினர்கள் பங்குகொண்டிருந்தாலே மண்டபம் நிரம்பியிருக்கும் ஆனால் அவ்வாறான நிலைமையை காண முடியவில்லை என்று கூட்டத்தில் பங்குகொண்டிருந்த ஒருவர், புதியமுரசிடம் தெரிவித்தார். 40-50 வரையிலானவர்களே நிகழ்வில் பங்குகொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.