சம்பந்தனுக்கு பாதுகாப்பு வழங்கிய பிரபாகரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்த பிரபாகரன், ஒரு காலத்தில், சம்பந்தனுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக திருகோணமலைக்கு வந்ததாக. இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன், திருகோணமலை கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு; கொண்டிருந்த வேளையில், ஒற்றைப் பனைமரம் ஒன்றின் கீழ் நின்று கொண்டிருந்தவர் வெளிப்பட்டு, நான்தான் பிரபாகரன், உங்களுக்கு இங்கு ஒரு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது, உங்களுக்கு பாதுகாப்பு வழங்கவே நாங்கள் வந்திருக்கின்றோம் என்று கூறியதாகவும், பின்னர், வன்னியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்த போது, பிரபாகரன் இதனை நினைவுபடுத்தியதாகவும் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

இரா.சம்பந்தனை நினைவு கூர்ந்து, நேற்றைய தினம் (11.07.2026) திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே, சுமந்திரன் இந்த தகவல்களை தெரிவித்திருக்கின்றார்.

2012இல் ஆற்றப்பட்ட நாடாளுமன்ற உரை ஒன்றின் போது – தான் விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்ததாக சம்பந்தன் கூறியிருந்தமையும் வரலாறு. சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில், விடுதலைப் புலிகளால் எப்போதும் சம்பந்தன் கொல்லப்படலாம் என்னும் நிலைமையிருந்தது. இதன் காரணமாக, பலமான பாதுகாப்புடனேயே சம்பந்தன் திருகோணமலை வருவதுண்டு.