ஒரு அப்பாவி காரணமில்லாமல் துன்பப்படுகின்றார் – சுரேஸின் மனைவி

தனது கணவர் ஒரு அப்பாவி – காரணங்கள் இல்லாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் கைது செய்யப்படும் போது, நல்ல ஆரோக்கியத்துடனும் மனநிலையோடும் இருந்தார் ஆனால் இப்போது உயர் குருதி சர்க்கரையுள்ளவராக மாறியிருக்கின்றார் – மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்றார். இவ்வாறு சுரேஸ் சலேயின் மனைவி, மனோரி சலே தெரிவித்திருக்கின்றார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடப்பில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், தேசிய புலனாய்வு சேவைப் பணியகத்தின் முன்னைநாள், பணிப்பாளர் சுரேஸ் சலேயின் மனைவி, கொழும்பிலிருந்து வெளிவரும் டெலிமிரர் ஆங்கிலப்பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கின்றார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது, தனது கணவர் நாட்டிலேயே இருந்திருக்கவில்லை – அவர் இந்தியாவில் இருந்தார். இது அரசியலுக்கும் மேலாக தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையே என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். அவரது நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணலாம்.

https://www.dailymirror.lk/hard-talk/Suresh-is-an-innocent-man-suffering-for-no-reason-Manori-Sallay/334-343241