அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு இராணுவ நடவடிக்கையினால், ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள “மனிதாபிமான பேரழிவு” தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இரு நாடுகளின் மீள்கட்டமைப்பு பணிகளுக்கு உதவப் போவதாக பெய்ஜிங் அறிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் லின் ஜியான், செய்தியாளர்களிடம் பேசுகையில், “அந்தந்த நாடுகளின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
அங்குள்ள மக்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மீட்பு மற்றும் மீள் கட்டமைப்பு பணிகளில் பயனளிக்கும் நோக்கில் மேற்படி உதவிகள் வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு, பெப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட, டெகிரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் பின்னர், சீனா உதவி வழங்குவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதத்தில் சீனா ஈரானுக்கு அவசர உதவிகளை அனுப்பியிருந்தது.
அமெரிக்க- ஈரான் சமாதான உடன்பாடு நாளை மறுதினம் கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
