ஈரானின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மீண்டும் கடுமையான தாக்குல்களை மேற்கொண்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற கட்டார் மற்றும் சவுதிக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதைத் தொடர்ந்தே, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரானிய ஊடகத் தவல்களின்படி, ஈரானின் மூன்று துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடுமையான தாக்குல்களை மேற்கொண்டுள்ளது. அத்துடன், ஈரானின் எண்ணெய் விற்பனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த அனுமதியையும் இரத்துச் செய்வதாகவும் அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. கடந்த யூன் மாதம் 17ம் திகதி, இரு நாடுகளுக்கும் இடையில், ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இடைக்கால சமாதான உடன்பாட்டின் கீழ், மேற்படி இணக்கம் ஏற்பட்டிருந்தது. அமெரிக்காவின் தாக்குல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு மீண்டும் பதட்டமடைந்திருக்கின்றது.
