இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான மாகாண சபை முறைமை இப்போதும் பேசு பெருளாக இருக்கின்ற நிலையில், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, இந்த மாதத்துடன் 39 ஆண்டுகள் ஆகின்றன. இப்போதும் அதனை முழுமையாக அமுல்படுத்துமாறு தமிழ் கட்சிகள் கோரிவருகின்றன. இந்த நிலையில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்திருந்த ஒரு கூற்றை, ஆய்வாளர் கே.கே.எஸ்.பெரேரா, கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலி மிரரில் எழுதியிருக்கும் கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் மிகவும் அரிதாக கூறும் விடயத்தை அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறான ஒரு உடன்பாட்டை நீங்கள் ஏன் தமிழ் தலைவர்களோடு செய்யவில்லை என்று கேட்டதற்கு பதிலளிக்கும் போது – “எங்களிடம் அதற்கான துனிவிருக்கவில்லை – அதற்கான புத்திக் கூர்மை இருக்கவில்லை – அதற்கான தூரநோக்குடன் கூடிய அவதானம் இருக்கவில்லை என்று ஜே.ஆர் பதிலளித்திருக்கின்றார். மிகவும் அரிதான இந்தப் பதில், பொது வெளிகளில் அதிகம் பேசப்படாத ஒன்று.
