ஈரானுக்கு எதிராக நேட்டோ

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் “முற்றிலும் தேவையானவை” என்று நேட்டோ கூட்டணியின் தலைவர் மார்க் ரூட்டே தெரிவித்திருக்கின்றார். போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கின்ற போது, அதனை ஈரான் மீறும் நிலையில், அமெரிக்கா நிச்சயம் அதன் இராணுவ ஆற்றலையே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருகின்றார்.

ஜனாதிபதி ரம் நிர்வாகத்திற்கும் நேட்டோவிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை, சீர் செய்யும் முயற்சிகள் முன்னேற்றமடைந்து வரும் நிலையிலேயே, ரூட்டே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். நேட்டோவிற்கான செலவுகளை பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் ரம்பின் நிபந்தனைளை ஏற்றும் கொள்ளும் நிலைக்கு நேட்டோ கூட்டணி இறங்கிவந்திருக்கின்றது