மாகாண சபையிலிருந்து ஆரம்பித்து மத்தியில் கூட்டாட்சி, மாகாணத்தில் சுயாட்சி என்பதை நோக்கிச் செல்வதே எங்களுடைய நிலைப்பாடு. ஆரம்பம் முதலே இதனையே நான் முன்வைத்து வருகின்றேன். இன்று அனைத்து கட்சிகளும் எனது நிலைப்பாட்டை நோக்கியே வந்திருக்கின்றனர். தென்னிலங்கையில் ஆட்சியமைப்பவர்கள் எவருமே தங்கத் தாம்பாளத்தில் தீர்வு தரப்போவதில்லை. எங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் சூழலை நாங்கள்தான் உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் அனுசரனையையும் நாங்கள் பெற முடியும். அவ்வாறில்லாது தமிழ் நாட்டுத் தலைவர்களை சுயலாப நோக்கில் சந்திப்பதால் பயனில்லை. சுயலாபம் தேடும் முயற்சிகளால் தமிழ் மக்களுக்கான நியாயங்களை வெற்றிகொள்ள முடியாது
இவ்வாறு – ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர், தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜ்யை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருப்பது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
