நீர்கொழுப்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கின்றது. நூறு பேர் காயமடைந்துள்ளனர். சர்வதேச ஊடங்களில் இடம் பெற்ற சிறைக் கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்றா அல்லது பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களின் விளைவா – என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த நிலையில், சிறைக் கலவரத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதான, செய்திகள் தற்போது வெளியாகியிருக்கின்றது. 73 வயதான எஸ்.உண்ணிகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு கொலப்பட்டுள்ளதாக, கொழும்பு தகவல்களை மேற்கோள் காண்பித்து, இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இந்தியத் தூதரகம் இதனை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருக்கும் இந்தியர்களை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
