பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளத்தின் மீது ஆயுதமேந்திய குழு திடீரென தாக்குதல் நடத்தியதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலானது இன்று(04.11.2023) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதோடு மூன்று பேர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.இருந்த போதிலும், மூன்று விமானங்கள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.