ரஸ்யா, ஈரான் கண்டனம் ?

வெனிசுலாவின் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான், கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த சனிக்கிழமை (3) காலையில், அமெரிக்கா படையினர் விசேட தாக்குதல் நடவடிக்கை ஒன்றின் மூலம், ஜனாதிபதி நிக்கலோஸ் மதுராவை கைது செய்து, நியுயோர்க் கொண்டு சென்றனர்.

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா ஜனாதிபதி மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்கா தொடர்ந்தும் குற்றம்சாட்டி வந்த நிலையில்தான் இந்த தாக்குதல் இடம்பெற்றது.
இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.
வெனிசுலா ஜனாதிபதி பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று ட்ரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை வெனிசுலா மீதான ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு என்று கண்டித்துள்ளது.

இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் தங்களின் அரசியல் சித்தாந்தத்திற்காக அமெரிக்கா இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ரஸ்யாவின் வழியில் கொலம்பியா, கியூபா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.