யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணனின’ இசை நிகழ்வொன்றை நடத்தவுள்ளார். குறித்த திகதியில் இந்திய அமைதிப் படைகள் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்தில், யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்தத் திகதியில் குறித்த நிகழ்வை நடத்த வேண்டாமென்றும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
காங்கிரஸ் கட்சியின் அறிக்கைக்கு பின்னால் சீனாவின் திரைமறைவு நகர்வுகள் இருப்பதாக தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகையான தினமலர் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கு பகுதிகளில் சீனா ஆர்வம் காண்பித்துவரும் நிலையில்தான், ஒரு சாதாரண இசை நிகழ்சிக்கு எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது. எனவே இதற்கு பின்னால் சீனா இருப்பதற்கான வாய்ப்புண்டு. தமிழ் மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு மனோபாவத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகளை குறித்த கட்சி முன்னெடுப்பதாகவும் தினமலர் செய்தி குறிப்பிடுகின்றது.
கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (முன்னணி) வடக்கு கிழக்கில் இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவது இரகசியமான ஒன்றல்ல. இதன் பின்னணி குறித்து பலருக்கும் சந்தேங்கள் உண்டு.