மாகாணசபை தேர்தலை நடத்த தயார்

எதிர்க்கட்சிகள் தேர்தல் முறைமைக்கு இணக்கம் தெரிவித்தால், தாமதமான மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் தயார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (28.11.2023) அவர் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் முறைமை தொடர்பில் வித்தியாசமான கருத்துக்களை கூறி வருகின்றார்கள்.மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் முறைமைக்கு அவர்கள் இணக்கம் தெரிவித்தால் எங்களால் தேர்தலை நடாத்த முடியும். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பழைய முறைமையில் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என கூறும் அதேவேளையில் சிலர் புதிய முறையை பரிந்துரைக்கின்றார்கள்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தவொரு கட்சியும் தெரிவுக்குழுவில் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என்பதோடு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கூறுபவர்களே அதற்கு முட்டுக்கட்டையாகவும் செயற்படுகிறார்கள் என கூறியுள்ளார்.