மகிந்த ராஜபக்ச தரப்பின் நகைச்சுவை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சிறையில் அடைக்க முடியாததால் அவரின் பாரியார் சிரந்தியை சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே அறிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச இன்று (09-02-2026) காலை 9:30 மணிக்கு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இருந்து வெளியேறி சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோஜ் கமகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது பற்றி குறிப்படும் போது நல்ல நகைச்சுவையான விடயம் ஒன்றையும் குறிப்பிட்டிருக்கின்றார். இதை அரசியல் பழிவாங்கலாகவே நாம் பார்க்கிறோம். புலம் பெயர் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதி ஒன்று நிறைவேற்றப்படுகிறது. மகிந்த ராஜபக்சவை பழிவாங்க முடியாததால் அவரின் பாரியார் மற்றும் புதல்வரை பழிவாங்க துடிக்கின்றனர். ராஜபக்ச குடும்பத்தையே சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் ராஜபக்சவை பழிவாங்க யாருக்கு ஆசை இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.

இவ்வாறான சிறுப்பிள்ளைத் தனமான வேலைகளை நிறுத்திவிட்டு நாட்டின் அபிவிருத்தியை மேற்கொள்ளவும். திறைசேரியில் பணம் இருப்பதாக மார்தட்டினர். ஆனால் வழங்கப்பட்ட காசோலைகளில் பணம் இல்லையாம்.