கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் மக்களை எப்போதும் ஏமாற்றும் வேலையையே செய்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடக்கமாட்டேன் என நாடாளுமன்றத்தில் சத்திப்பிரமாணம் செய்துவிட்டு, சுதந்திர தினத்தை எப்படி கரி நாளாக அறிவிக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடந்த அரசியல் தொடர்பான செவ்வியின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாடாளுமன்ற உறுப்பினருக்கான அனைத்து சலுகைகளையும் எடுத்துக் கொண்டு அரசியலமைப்புக்கு விரோதமாக எவ்வாறு அவரால் செயற்பட முடியும்.அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
இவை மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் ஆகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பரம்பரையையன் அரசியலையே தொடர்கின்றார். தங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் கொழும்பில் வைத்துக் கொண்டு வடக்கில் கரிநாள் என்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் அரசியல்.
