தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

“அமைச்சரவையின் கோரிக்கையின் பேரில் நாங்கள் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இன்றைய கூட்டத்தின் முடிவுகளை அமைச்சரவைக்கு அறிவிப்பேன். தற்போதைய அரசாங்கம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுள்ளது” என பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பல கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன,” அதே நேரத்தில் தேர்தல் இரத்து செய்யப்படாது என்பதை பிரதமர் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.