சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ள அமெரிக்கா

China - puthiyamurasu

அமெரிக்கா பல்வேறு காரணங்களுக்காக சில நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்து வரும் நிலையில்,13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்துள்ளது. குறித்த தடை உத்தரவை அமெரிக்க வர்த்தகத்துறை நேற்று(17.10.2023) வழங்கியுள்ளது. அமெரிக்காவின் தேசிய நலன் மற்றும் வெளியுறவு கொள்கைக்கு எதிரான செயல்பாடுகளை கொண்டிருப்பதாக கூறி சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், கணினி மற்றும் மின்னணு கருவிகளுக்கான சிப் தயாரிப்பு நிறுவனமான மூர் திரெட் இன்டெலிஜென்ட் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.