இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் கடல் ஆய்வுகளை மேற்கொள்ள சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பணி எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் (NARA) மற்றும் ருஹுணு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து கடல்சார் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கப்பலில் இலங்கை கடற்படை அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை சீன ஆராய்ச்சி கப்பல் ‘ஷி யான் 6’ கடந்த (25.10.2023) ஆம் திகதி இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டமை குறிப்பித்தக்கது.