சீனா மேசையில் பணத்தை காட்டுகின்றது – பிரித்ததானியாவின் முன்னாள் அமைச்சர் தெரிவிப்பு.

சீனாவை குற்றம்சாட்ட முடியாது ஏனெனில் நாங்கள் செய்ய வேண்டியதை செய்யவில்லை ஆனால் அவர்களோ மேசையில் பணத்தை காட்டுகின்றனர். பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும் தற்போது the House of Lords உறுப்பினருமான, Lord Hugo Swire   தெரிவித்திருக்கின்றார். சீனாவினால் ஏற்படப் போகும் நீண்டகால மூலோபாய சவால்கள் என்னும் தலைப்பில் உரையாற்றுகின்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

நாங்கள் வெளிநாடுகளுக்கான நிதி உதவிகளை குறைத்திருக்கின்றோம். இதனால் மற்றவர்களுக்கான கதவுகள் திறக்கின்றன. இதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம். அண்மையில், இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் துறைமுகநகரத் திட்டத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கான கருத்தரங்கில் பலர் பங்குகொண்டு, அதனை ஆதரித்திருக்கின்றனர். இந்த இடத்தில் சீனாவை விமர்சிப்பதை விடவும் எங்களுடைய சொந்த நிலைமைகளையே நாம் உற்றுநோக்க வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்திருகின்றார்.

கடந்த வாரம் பிரித்தானியாவின் முன்னார் பிரதமர் டேவிட் கமரோன், சீனாவின் துறைமுக நகரத்த் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் பரித்தானியாவில் கடும் விமர்சனத்திற்குட்பட்டதும் குறிப்பிடத்தக்கது.