கோட்டபாய யாழ்ப்பாணம் வர வேண்டும் – யாழில் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடை சட்டத்தை ரத்துச் செய்யுமாறும் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தினை நிறுத்துமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வைத்து, லலித், குகன் என்போர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், பாதுகாப்பு காரணங்களை காட்டி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றுக்கு வருகை தராமை கண்டனத்துக்குரியது என்றும் அரசாங்கம் நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என்றும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டத்தில், யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய சமூக உரிமை இயக்கம் மற்றும் தெற்கை மையப்படுத்திய சிங்கள சகோதரர்களும் கலந்து கொண்டனர்.