கொழும்பு துறைமுக நகரத்தை சீனா விட்டுக் கொடுக்கின்றதா?

ஒரு கடினமான தசாப்தத்தின் பின்னர் இலங்கை அடையும் வெற்றியானது கொழும்பு துறைமுக நகரத்தில் தங்கியிருப்பதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி வாய்ப்புகள் தொடர்பில் டுபாயில் நடைபெற்ற ஊக்குவிப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன்று ஊடகங்கள் இதனை சீனாவுக்குச் சொந்தமானவை, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்றே கூறுகின்றன. நீங்கள் சரியாகப் பார்த்தால், அது இலங்கைக்கு சொந்தமானது. இது இலங்கை தயாரித்த சட்ட விதிமுறைகளின் கீழ் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆம், சீனா அங்கு முதலீடு செய்துள்ளது. பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸின் ஆய்வின்படி, இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டமாகும், இது சுமார் 2 இலட்சம் வேலைகளை உருவாக்க முடியும்.  அறிக்கைகள் சில கேள்விகளை எழுப்பினாலும், சர்வதேச நாணய நிதியம் வணிகங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என கூறியுள்ளது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.