அமெரிக்காவில் இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சாந்துவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பிய சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நியூயார்க் நகரம் குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சாந்துவை(taranjit-singh-sandhu) காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
கருத்துச் சுதந்திரம் என்னும் பெயரில் காலிஸ்தான் தீவிரவாத செயற்பாட்டாளர்களின் அட்டகாசம் மேற்குலகில் அதிகரித்து வருவதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.