இந்தியா மற்றும் ஜப்பான் கடன் குழுவுடன் உடன்பாடு

5.9 பில்லியன் டொலர் பொதுக் கடனை மறுசீரமைப்பதற்கான ஒரு முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இது, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இரண்டாவது தவணை நிதியான 334 மில்லியன் டொலர்களை நாடு பெறுவதற்கான முக்கிய நடவடிக்கையாகும் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்றில், இலங்கையின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான கூட்டு முயற்சியின் அடையாளமாக, இந்தியா மற்றும் ஜப்பானின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ கடன் குழுவுடன் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் விதிமுறைகள் பொருளாதார மீட்சிக்கு முக்கியமானவை மட்டுமல்ல, வரி நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் இலங்கையி;ன் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.