எப்போதும் இல்லாதவாறு இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சீனா தனது இராணுவ பலத்தை அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறை தலைமையகமான பென்டகன் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை ஒன்றினையும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.
சுமார் 03 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் சீனா மேற்கொண்ட நில ஆக்கிரமிப்புக்களினை எதிர்த்து, இந்தியாவின் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து சீனாவுடன் மோதல்கள் இடம்பெற்றது.
இந்த மோதலில் 19 இராணுவ வீரர்கள் வரை மரணம் அடைந்தனர்.